கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“கனடா, பிரான்ஸ், மொழிகள் பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு” என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை, 2023 டிசம்பர் 14 ஆம் திகதி கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் கனடாவில் குய்பெக்கை தவிர எனைய பிரானஸ் சமூகங்களுடன் கூடிய பகுதிகளில் குடியேற விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி விண்ணப்பதாரர்கள், TEER வகை 0, 1, 2, 3, 4 அல்லது 5 ஆகிய தொழில்களுக்கான உண்மையான வேலை வாய்ப்ப்பு பெறுவதற்கான தகுதியாக ஒரு வருட முழுநேர வேலை அனுபவத்தை அல்லது அதற்குச் சமமான தகைமைகளை காண்பிக்க வேண்டுமென கூறப்படுகிறது.
இவ்வேலை அனுபவத் தேவையை நிறைவேற்ற முடியாதவர்கள், கனடாவில் ஒரு வருடகால பருவக் கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் கல்விக் காலம் முழுவதும் முழுநேரமாக படித்திருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் நிரந்தர குடியுரிமை பெறும் வரை அந்த நிலையைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பிரான்ஸ் மொழி பேசும் சமூகங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.