2025 பொங்கல் விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இதன் அனைத்து விதமான படப்பிடிப்புகளிலும் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
இதற்கு இயக்குநர் மகழ் திருமேனி நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர் ‘ உங்கள் எல்லையற்ற அன்புக்கும், இப்படத்தின் படப்பிடிப்பில் நீங்கள் நீங்களாக இருந்து பல வழிகாட்டல்களையும், ஊக்கத்தினையும் அளித்ததற்கு நன்றி Sir. விடாமுயற்சி உண்மையில் விடாமுயற்சியின் வெற்றியாகும். முழுப் படக் குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது Sir. முதல் நாள் இருந்து இன்று வரை நீங்கள் எமக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி Sir ‘என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி இருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த வருடம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என இரசிகர்கள் கூறி வருகின்றனர்.