2025ஆம் ஆண்டில் கனடாவின் வருமான வரி வரம்புகளை கனடா வருவாய் நிறுவனம்(Canada Revenue Agency – CRA) மாற்றியமைத்துள்ளது.
குறித்த வருமான வரி வரம்புகள், பணவீக்கத்தை அடிப்படியாக வைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மூலதன ஆதாய வரி விகிதத்தை உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்தற்கு அமைய, 250,000 கனேடிய டொலர்களை விட அதிக வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விகிதம் ஒரு பங்கு முதல் இரண்டு பகுதிகளுக்கு உயர்த்தப்பட்டது.