‘தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப நிகழ்வு’
16 வது ஆண்டு ‘தமிழ் மரபுத் திங்கள்’ ஆரம்ப நிகழ்வு 09.01.2025 அன்று Scarborough Civic Center இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் உரைகளும் இடம்பெற்றன. அன்றைய தினம் எனது மிது கான லய நுண்கலைக்கூட மாணவர்களின் தமிழிசை பாடல் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வருடத்திற்கான உத்தியோகபூர்வ ஓவிய அட்டையும் வெளியிடப்பட்டது.
இம்முறை ‘TAMIL VIBES’ என்ற தொனிப்பொருளில், கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆண்டாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கருப்பொருள் தமிழ் கலைகளின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும், தமிழ் கலைஞர்கள் நம் உலகில் தங்கள் முத்திரையைப் பதிப்பதற்கான வழிகளையும் காண்பிக்கும்.
கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபு மாதமாக, பிரகடனப்படுத்தி, அயராது உழைத்து வெற்றி கண்ட தமிழ் மரபுத் திங்கள் நிறுவுனர், செயலவை மேலாளர் திரு. நீதன் சண் அவர்களிற்கு எமது நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.