ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து
வரும் காட்டுத் தீயைத் தூண்டிய காற்று மேலும் தீவிரமடையும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என அதிகரித்துள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் என்ற முன்னறிவிப்பால், ஏற்கெனவே எரிந்து வரும் நான்கு காட்டுத் தீயை மேலும் தீவிரமாக்கும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.