YouTube நிறுவனம் பயனர்களின் நலன் கருதி புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்துவருகிறது.
தலைப்பும், புகைப்படங்களும் வேறு ஒன்றை காட்டும் ஆனால் வீடியோவிற்குள் வேறு விடயங்கள் இருக்கும்.
குறிப்பாக செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்று வரும்போது, மக்கள் துல்லியமான தகவலைப் பெற வேண்டும் என்று YouTube விரும்புகிறது.
அத்தகைய தவறான வீடியோக்களை YouTube நிறுவனம் அகற்றும். அதேபோல், ஒரு வீடியோவின் படத்தில் அது பெரிய செய்தி என்று கூறினாலும், அந்த வீடியோவில் எந்த செய்தியும் இல்லை என்றால், அதுவும் நீக்கப்படும்.
இதுபோன்ற தவறான வீடியோக்கள் மக்களின் நேரத்தை வீணடிப்பதோடு, அவர்களை தவறான வழிகளுக்கும் இட்டுசெல்கிறது.
அதேநேரம் அவர்கள் YouTube மீது நம்பிக்கை வைப்பதை நிறுத்திக் கொள்கிறார்கள்.
எதிர்வரும் மாதங்களில், அவ்வாறான தவறான தகவல்களை வழங்கும் வீடியோக்களை YouTube அகற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.