ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தினால் மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தகுந்த பதிலடி வழங்கப்டும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கப்படாது எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரேஸிலில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றும் போது, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உக்ரைனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் நகரத்தின் சிறுபகுதியை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைக்க நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய படைகள் களமிறக்கப்பட்ட பின்னர் இந்த தீர்மானத்தை அமெரிக்க மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.