இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 10 – 2024 செவ்வாய்க்கிழமை

Must read

  • குரோதி வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.12.2024
  • சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
  • இன்று அதிகாலை 03.32 வரை நவமி. பின்னர் தசமி.
  • இன்று காலை 11.34 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.
  • மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
  • சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷம்

பணப்பற்றாக்குறையால் சிறு வியாபாரிகள் சிரமப்படுவீர்கள். நீங்கள் யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களால் பயன் பெற மாட்டீர்கள். புதிய ஆர்டர்களைப் பெற வெளியூர் செல்வீர்கள். ஆனால் அலைச்சலால் சிரமப்படுவீர்கள். .வியாபாரத்தில் சின்னச்சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வேலையாட்கள் பிரச்சனையால் தொழிலில் பாதிப்படைவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள். வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள். பணப் பிரச்சனையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மாமனார் வீட்டுத் தொல்லையால் மனக்கவலை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் த

பெறுவீர்கள். வராக் கடன்கள் வசூலாகி பொருளாதார நிலையை மேம்படுத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் கணிசமான பலனை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆதாயம் பார்ப்பீர்கள்.

கடகம்

கமிஷன் தொழில்களில் பெருகும் லாபத்தால் பிரமிப்படைவீர்கள். விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் பெரும் பணம் பார்ப்பீகள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் செய்வீர்கள். வேலையிடங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

பிள்ளைகளின் விருப்பம் அறிந்து திருமண ஏற்பாடுகளைச் செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த பெண்ணை மணம் செய்ய பிடிவாதம் காட்டுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனதுக்கு இதமாக நடந்து கொள்வதால் மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேர்ப்பீர்கள். சந்திராஷ்டமம். கவனமாக இருங்கள்.

கன்னி

வாகனங்களில் செல்லும்போதும் வளைவுகளில் திரும்பும்போதும் கவனத்தை சிதற விடாதீர்கள். உறவினர் வீட்டில் துக்க சம்பவங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பேங்க் லோன் சாங்சன் ஆக தாமதமாவதால் பணம் புரட்ட சிரமப்படுவீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை எந்த இடத்திலும் விடாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாததால் குழப்பம் அடைவீர்கள்.

துலாம்

குடும்ப குழப்பங்களை சிரமப்பட்டு களைவீர்கள். பெண்கள் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் லாபம் குறையாமல் நடப்பதால் சேமிப்பை அதிகரிப்பீர்கள். வீடு வாகனத்திற்காக செலவு செய்வீர்கள். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்

வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் சங்கடப்படுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விடுத்து படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வருமானத்தை வைத்து கையிருப்பை அதிகப்படுத்துவீர்கள்.

தனுசு

எதிர்ப்புகளை விலக்கி செயல்களில் வேகம் காட்டுவீர்கள். உங்கள் ஆலோசனையை கேட்டு குடும்பத்தினர் நடப்பதால் குதூகலம் அடைவீர்கள். அதிகமாக உழைத்து வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். வெளியிடங்களில் கோபமான வார்த்தைகளை கொட்டாதீர்கள். கடின உழைப்பால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மகரம்

வங்கியில் இருந்து தேவையான நிதி உதவியை பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்த மனத்தாங்கலை அகற்றுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். திட்டமிட்டுச் செய்வதன் மூலம் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பீர்கள். நன்மை தீமை பற்றி கவலை இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்து தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

கும்பம்

தொழிலுக்கு எதிராகக் கிளம்பிய போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு கடன் வாங்குவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஊழியர்கள் வேலை செய்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். .

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

துணிச்சலாக முடிவெடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி குடும்பத்தில் குதூகலத்தை கொண்டு வருவீர்கள். திறமையான பேச்சின் மூலம் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பண வரவு அதிகரிக்க பல வழிகளில் முயற்சி எடுப்பீர்கள். தொழிலுக்கு தேவையான உதவியை நண்பர்களிடம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்: 3 8 5

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article