2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலா பயணிகளை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஜனாதிபதி ஏற்படுத்தினார்.
அவருக்கு இருக்கின்ற சர்வதேச தொடர்புகளே அதற்கு காரணமாகும். மேலும், மற்றொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் வகையிலான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இன்று நம்பிக்கையுடன் நாட்டிற்கு வருகிறார்கள்.
அத்துடன், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி ஏற்கனவே தயாரித்துள்ளார். அதன் மூலம் வருமானத்தைப் பலப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். 2019 ஆம் ஆண்டில், 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
அந்த இலக்கை மீண்டும் அடைய முடியும். இத்தொகையை 25 இலட்சமாக அதிகரிக்கவும் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐம்பது இலட்சமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது நாளாந்தம் 500 டொலர்கள் வரையில் செலவு செய்யக்கூடிய சுற்றுலா பயணிகளை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக தென்னிந்தியாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ஏற்கனவே ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.