மகளிரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் புரட்சி பாடலுக்கான வரிகளை பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார்.
இந்தப் பாடலை ஜீ.வி.பிரகாஷின் தாயாரும், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியுமான ஏ.ஆர்.ரைஹானா அறிமுகம் செய்து வைக்க, பிரிட்டன் எம்.பியான எமிலி டார்லிங்டன் வெளியிட்டு வைக்கவுள்ளார்.
இதற்கிடையில், இந்தப் பாடலை கடந்த 16ஆம் திகதி பிரிட்டன் பாராளுமன்றத்தில், த வொய்ஸ் ஆர்ட்ஸ் குழுவினருடன் எமிலி டார்லிங்டன் எம்.பி. இணைந்து பாடியிருந்தார்.
இந்தப் பாடலைத் தயாரித்துள்ள The Voice Art யிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்திய பிரபல தொலைக்காட்சிகளான விஜய் மற்றும் ஜீ தமிழ் நடத்தும் பாடல் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.