கனடாவின் மத்திய வங்கி அடமான கடன் வட்டி விகிதத்தைக் குறைத்தது!!!
புதன்கிழமை, கனடாவின் மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்துள்ளது. இதன்மூலம், தற்போதைய வட்டி விகிதம் 2.75% ஆக உள்ளது. இது தொடர்ச்சியாக ஏழாவது முறையாக வங்கி வட்டியைக் குறைப்பதாகும்.
இந்த நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவுக்கு எதிராக இரும்பு மற்றும் அலுமினியத் துறையில் புதிய சுங்கத் தடைகளை (tariffs) விதித்த சில மணிநேரங்களுக்குள் வெளியிடப்பட்டது.