கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் கஞ்சா அடங்கிய 20 டின்கள் இருந்துள்ளதை இலங்கை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த கஞ்சா கையிருப்பு வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு வந்த பொதியொன்றில் ஒன்றில் 08 டின் கஞ்சா இருந்ததாகவும், களுத்துறை மற்றும் வவுனியா முகவரிகளுக்கு வந்த இந்த பொதியின் பெறுமதி தலா 31,994,000 மற்றும் 10,530,000 ரூபாய்களாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.