கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது.
உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை வளாகத்தின் அனைத்து வகுப்பறைகளையும் மூடி மாணவர்களின் பாதுகாபை உறுதி செய்ய பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்த மேலதிக விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இடோபிகொக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.