கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தினால் காயமடைந்த வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் ஊழியர்களும் அடங்குவதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒன்பது மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின் 7வது மாடியிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 02 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, ஹோட்டலில் சிக்கியிருந்த வெளிநாட்டவர்களை தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மீட் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தீப்பரவலுக்கான சரியான காரணம் தற்போது வரையில் தெரியவரவில்லை என கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.