முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன், இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் பயணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) மூலம் தொடங்கி, 2013 ஆம் ஆண்டு முதல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் (ஈ.பி.டி.பி) இணைந்து, கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 2024ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நல்ல வாக்குகள் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் சில காரணங்களினால், திலீபன் இப்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு உறுதியாக கட்சியோ அல்லது அதன் தலைமையோ காரணமில்லை என்று அவர் தெளிவுபடுத்தி, தனது தனிப்பட்ட முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இதற்கான கடிதத்தை, கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளதாகவும், திலீபன் குறிப்பிட்டுள்ளார்.