டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Must read

டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், ரோச்லான் அவென்யூ மற்றும் மார்லி அவென்யூ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து குழந்தை காணவில்லை என தந்தை பொலிசாருக்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பொலிசார் குழந்தையை கண்டுபிடித்து ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சில மணி நேரங்களிலேயே குழந்தை உயிரிழந்தது.

ஆரம்பத்தில், குழந்தை தேவையான பராமரிப்புகளை வழங்கவில்லை என்பதற்காக தாய்க்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், தாய் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் டொராண்டோ நகரத்தில் நடந்த 79ஆவது கொலைச் சம்பவமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article