டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் ஒரு வீட்டில் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Whitley Castle Crescent பகுதியில், Finch Avenue East மற்றும் McCowan Road அருகே, இரவு 11 மணியளவில் குத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயங்களுடன் ஒருவரை கண்டனர். அவரை மீட்கும் முன்பே, அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அந்த நபரின் 32 வயது மகனை அதே இடத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், குற்றச்சாட்டுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தக் கொலை சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. இதுதொடர்பான விசாரணையை டொரொண்டோ போலீசாரின் கொலைவழக்கு துறை மேற்கொண்டுள்ளது.
(மூலம்: Global News)