டொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக டொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்தச் சபை கூறுகிறது.
கடந்த நவம்பர் மாதம் டொறன்ரோவின் பெரும்பாக பகுதியில் 5875 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 40 வீத அதிகரிப்பாகும்.
அதற்கு நிகராக வீடுகளின் விற்பனை விலையும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது 2.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.