கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்பவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு தொடர்புடைய 25 வயதான எய்டன் ஹெர்கியூலிஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, டர்ஹம் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் நடந்த பத்தாவது படுகொலை சம்பவம் ஆகும்.
பொலிஸார் சம்பவ இடத்தில் சந்தேகநபரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.