கனடாவில் நகைக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் மார்க்கம் பகுதியிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சுத்தியல்களைக் கொண்டு நகைக் கடையின் கண்ணாடிகள் உடைத்தே குறித்த கொள்ளை முயற்சி மேற்கொள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சீசீடிவீ மூலம் கொள்ளை முயற்சி மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும்,
10 பேர் வரையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.