நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி

Must read

டென்னிஸ் போட்டியில் விளையாடும் வீரர்கள் தத்தங்களது நாடுகளை அடிப்படையாக கொண்டு போட்டியிடும் டேவிஸ் கிண்ண ஆடவர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சம்பியன் இத்தாலி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஜனிக் சின்னர் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார். கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதர்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கிண்ணம் வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது.

இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றது, டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பது, ஏ.டி.பி ஃபைனல்ஸ் என அனைத்தும் இந்தாண்டு சிறப்பான ஆண்டாக ஜனிக் சின்னருக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article