பிரான்சின் Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில், 19ஆம் தேதி Avenue du Président Roosevelt வீதியில் 40 வயதான ஒரு பெண் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண்ணை வீடற்ற நிலையில் தங்கவைத்ததாகவும், பின்னர் அந்த நபர் அவதூறாக செயல்பட்டு, பெண்ணை தாக்கியதாகவும் தெரியவந்தது. மருத்துவ சான்றுகளின்படி, அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து, 28 வயதான சந்தேகநபர் ஒருவரை Neuilly-sur-Marne நகரில் கைது செய்துள்ளனர்.