கனடாவின் பிராம்ப்டனில், பேருந்து நிறுத்தங்களின் அருகே மூன்று பெண்கள் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டதாக, 22 வயதுடைய ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன், போலி சாரதியாக தன்னைக் காட்டிக்கொண்டு, பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையங்களில் இருக்கும் இளம் பெண்களை, வாகனத்தில் வந்து, வாடகைக் காரைப் போல விபரித்து பெண்களை ஏற்றி, இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் மாணவர் வீசாவில் கனடாவில் வசித்த போதும் அவர் கல்லூரிக்குச் செல்வதில்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூன்று சிறுமி கடத்தல்,பாலியல் பலாத்காரம், மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த மாணவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.