தமிழ் சினிமாவில் ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற திரைப்படங்களின் மூலம் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய்.இவர் தற்போது அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ‘பேபி & பேபி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகர் ஜெயிற்கு கதாநாயகியாக அறிமுக நடிகை சாய் தன்யா நடிகின்றார். அத்துடன் இவர்களுடன் சத்யராஜ்,யோகி பாபு ,ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள்.
நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான குடும்ப கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புப்பணிகள் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இதன்
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும்,வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் Teaser ஐ படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் Trailer மிக விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.