போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட திட்டத்தை வகுத்து அபிவிருத்தி செய்யுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்து்ளளார்.
மேலும் “போரினால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஓதுக்கிடு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே அரசாங்க நிதியிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப்பெற்று விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும் என்றும் ஏனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் கடந்த காலத்தில் யாழ் நகரத்தில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், யாழ் மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையம் கேட்காது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.