மனைவியை கொன்று 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்!

Must read

பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்த 28 வயதான நிகோலஸ் மெட்சன் 26 வயதான ஹொலி பிரம்லி இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் மீது மிகுந்த வெறுப்பு கொண்டுள்ள நிகோலஸ் தனது மனைவி வளர்த்த செல்லப்பிராணிகளை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹொலி வளர்த்த செல்லப்பிராணி வெள்ளெலிகளை மிக்சியில் அரைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொடூரமாக கொன்றுள்ளார்.

இதேவேளை, செல்லப்பிராணி நாயை துணிதுவைக்கும் எந்திரத்தில் வைத்து அரைத்து கொடூரமாக கொன்றுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், திருமணமாகி 16 மாதங்களாக மனைவி ஹொலியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அனுப்பாமல் நிகோலஸ் துன்புறுத்தியுள்ளார்.

அதேவேளை, தனது மகளை கடந்த சில நாட்களாக தொடர்புகொள்ளமுடியவில்லை என்று ஹொலியின் பெற்றோர் கடந்த ஆண்டு மார்ச் 18ம் திகதி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனிடையே, விசாரணை மேற்கொண்ட போலீசார், நிகோலசின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, மனைவி ஹொலி தன்னை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நிகோலஸ் பொலிஸிடம் கூறியுள்ளார்.

மேலும், மனைவி பல்லால் கடித்ததில் தன் உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொலிஸார் நிகோலஸ் வீட்டில் இருந்து சென்றனர்.

இந்த நிலையில், ஹொலி மாயமாதாக புகார் அளிக்கப்பட்டு 8 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் 25ம் திகதி லிங்கொன் பகுதியில் உள்ள வித்ஆம் ஆற்றில் பிளாஸ்டிக் பையில் மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் அது ஹொலியின் உடல் என்பதை கண்டுபிடித்தனர். ஹொலியின் உடல் 224 துண்டுகளாக வெட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், ஹொலியின் கணவன் நிகோலசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article