மொண்ரியல் பிரதேசத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நேற்று முன்தினம் 21ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், வாகனத்தை பின்பக்கம் வேகமாக செலுத்தி, நகையகத்தின் கதவுகளை உடைத்து உள் நுழைகின்றனர்.
இதன்பின்னர் அங்கிருந்த உரிமையாளர் கொள்ளையர்களுடன் போராடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 6 லட்சம் டொலர் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டொரான்டோ ஸ்காப்ரோ பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பல நகையகங்கள் கொள்ளையிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மொண்ரியலிலும் இந்தக் கொள்ளைச் சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.