யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

Must read

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே நேற்றையதினம் (17-04-2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

2 பிள்ளைகளின் தாயான இவர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article