முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது.
நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடை மையாக்குவதற்கு ஏதேனும் சட்ட ஏற்பாடுகள் இருக்குமாயின் இருந்தால் அதனை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித் தார்.
மேலும், மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் அந்த மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை அறவிடுவதற்கு ரணில் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சாடினார்.
மேலும், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான அக்கறையை நெற் களஞ்சியங்களுக்கு வழங்கியிருந்தால் இன்று நாட்டில் பல பிரச்சினைகள் வந்திருக்காது என்றும் அவர் கூறினார்.