அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை எதிர்த்து போரிட்ட இஸ்ரேலுக்கும் அமெரிக்கா இராணுவ உதவிகளை செய்து வருகிறது.
அண்மையில் உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், “உக்ரைன்- ரஷ்யா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் செலுத்துவது பைத்தியக்காரத்தனம் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.