முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, கோட்டாபய ஆட்சி சரிவின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை குறைத்திருந்தார்.
ராஜபக்ஷர்களின் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர் சிறிது காலம் மௌனம் சாதித்து வருகின்ற நிலையில் இவர் தனிக் கூட்டமைப்பொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் குறித்த கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.